மரத்திலிருந்து விழுந்தவனை நான்கு சந்தர்ப்பம் மாடு முட்டியது போன்றது அஸ்வெசும விவகாரம்! சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார்

அஸ்வெசும என்ற பெயரில் சிரமமான திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு  அது தற்போது மக்களுக்கான மூளைப் பிரச்சினையாக மாறியுள்ளது.

மரத்திலிருந்து விழுந்தவனை நான்கு சந்தர்ப்பங்களில் மாடு முட்டியது போன்ற கதையே இதுவாகும். இதன் மூலம் நிவாரணம் பெற்றுக் கொள்ள வேண்டிய 11 லட்சம் மக்களின் கழுத்து நெறிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

ஹிங்குரங்கொடயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

அஸ்வெசும  என்ற பெயரில் சிரமமான திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் அது அஸ்வெசும அல்ல. மக்களுக்கான மூளைப் பிரச்சினையாக மாறியுள்ளது.

மேலும் கையிருப்பிலுள்ள நிதியைத் திருடும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் நிவாரணம் பெற்றுக் கொள்ள வேண்டிய 11 லட்சம் மக்களின் கழுத்தே நெறிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் நிவாரணங்களை வழங்காமல் வழங்க வேண்டியவர்களுக்கு மாத்திரம் வழங்குமாறு சர்வதேச நாணய நிதியம் கூறியது.

70 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தை பாவிக்கும்  கொடுப்பனவுகள் நிபந்தனையின்றி வெட்டப்படுகின்றன.

மரத்திலிருந்து விழுந்தவனை நான்கு சந்தர்ப்பங்களில் மாடு முட்டுவது போன்று கதையே இதுவாகும். மின்சார கட்டணத்தை செலுத்த முடியாது மக்கள் சிரமப்படும் பின்புலத்தில் தற்போது சமுர்த்தி கொடுப்பனவுகளும் வெட்டப்படுகின்றன. – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.