அலுவலகத்திலிருந்து தனது உடைமைகளை அகற்றியுள்ள பொலிஸ்மா அதிபர் விக்ரமரட்ன
சீ.டி.விக்ரமரட்ன ஓய்வு பெறுவதால் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இருந்த அனைத்து உடைமைகளையும் அவர் அகற்றியுள்ளார் என பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 26 ஆம் திகதி தனது பதவிக்காலம் பூர்த்தியானதன் பின்னர் அவர் இவ்வாறு, அலுவலகத்தை காலி செய்துள்ளார் எனப் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலுவலகத்தின் தளபாடங்கள் தவிர்ந்த ஏனைய பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாகியுள்ள காரணத்தால் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை