எவருக்கும் பாதிப்பில்லை என்றால் எதற்கு தேசிய கடன்களை மறுசீரமைக்கவேண்டும்! மத்திய வங்கி ஆளுநரை போட்டுத் தாக்குகிறார் வாசுதேவ

 

சர்வதேச நாணய நிதியம் நாட்டை ஆட்சி செய்கிறது. எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றால் ஏன் தேசிய கடன்களை மறுசீரமைக்க வேண்டும். மத்திய வங்கி ஆளுநர் மீது நம்பிக்கையில்லை.

ஆகவே கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கணக்காளர் நாயகம் நாடாளுமன்றத்துக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மருதானையில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமையவே ஜனாதிபதி செயற்படுகிறார்.கடுமையான நிபந்தனைகள் ஒட்டுமொத்த மக்களுக்கும் சாபமாக மாறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியமே நாட்டை தற்போது ஆட்சி செய்கிறது. தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த எந்தத் திட்டத்தையும் அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவாதத்தைக் கொண்டு எவரிடமிருந்து கடன் பெறலாம் என்பது தொடர்பாக மாத்திரமே அவதானம் செலுத்தப்படுகிறது.

தேசிய கடன்களை மறுசீரமைப்பதால் வங்கி கட்டமைப்புஇ ஊழியர் சேமலாப நிதியம்இ ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று ஜனாதிபதிஇ மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றால் ஏன் தேசிய கடன்களை மறுசீரமைக்க வேண்டும்.

ஊழியர் சேமலாப நிதியம்இ ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள சகல கடன்களும் தரவிறக்கம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து புதிய பிணைமுறிகள் வழங்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடுகிறார்.

பிணைமுறிகளை புதிதாக விநியோகிக்க வேண்டுமாயின் நேரடி வட்டி வீதம் அதிகரிக்கப்பட வேண்டும்.மீண்டும் வரி வீதம் அதிகரிக்கப்பட்டால் சமூக கட்டமைப்பில் ஒருபோதும் அமைதி நிலவாது.

நாட்டு மக்களின் உழைப்பை சூறையாடும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை உறுதிப்படுத்தும் தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.