தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு சுன்னாகம் பிரான்ஸ் ஒன்றியத்தால் உதவி!
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சத்திரசிகிச்சைக் கூட்டத்துக்கு சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ் ஐக்கிய இராட்சியம் மில்லரன் கீன்ஸ் மகளிர் அணியினரால் சலலை இயந்திரம் ஒன்றும் சத்திரசிகிச்சைக் கூடக் கருவிகளை வைப்பதற்குரிய உபகரணம் ஒன்றும் ஒரு தொகுதி மருந்துப் பொருள்களுக்குரிய நிதியும் இன்று (வியாழக்கிழமை) அன்பளிப்புச் செய்யப்பட்டன.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்ட இந்த உபகரணங்களை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கப் பொதுச்சபை உறுப்பினரும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபரும், சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ் கிளைத் தலைவருமான லயன் மு.செல்வஸ்தான் வைத்தியசாலை நிர்வாகத்திடம் வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் றெமான்ஸ், சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி வாகீசன், நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளர் லயன் சி.ஹரிகரன், உப செயலாளர் சோ.செல்வரத்தினம், நிர்வாக உத்தியோகத்தர் ரமேஸ் மற்றும் சத்திரசிகிச்சைக்கூட வைத்தியர்கள், தாதியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை