அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற ராஜபக்ஷ குடும்பத்தவர் முயற்சி! அஜித் பீ பெரேரா சாடல்
தேர்தல் அதிகாரத்தில் தாக்கம் செலுத்தும் எந்த சட்டத்துக்கும் 2ஃ3 பெரும்பான்மை தேவையாகும். மேலும் இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை.
நாட்டில் சூழ்ச்சியான அரசியல் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதியின் அனுசரணையுடன் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் தமது அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.
பண்டாரகம பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
நாட்டில் தற்போது மீண்டும் சூழ்ச்சியான அரசியல் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுசரணையுடன் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் தமது அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.
நிதி இல்லை எனத் தேர்தலை நடத்தாமல் பிற்போட்டு திருட்டு தனமாக வந்த மேயர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வதை ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டிக்கிறது.
இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளுவோம். தேர்தல் அதிகாரத்தில் தாக்கம் செலுத்தும் எந்த சட்டத்துக்கும் 2ஃ3 பெரும்பான்மை தேவையாகும்.
மேலும் இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை. ஆகவே கெட்டகொடவுக்கு இதனை நிறைவேற்றுவதற்கு முடியாது. நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற முடியாது. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை