சச்சுரினை பராமரித்த இலங்கை பாகனுக்கு தாய்லாந்தின் அரச குடும்பத்தால் கௌரவம்!
இலங்கையை சேர்ந்த யானைப் பாகனை தாய்லாந்தின் அரசகுடும்பம் கௌரவித்துள்ளது.
சக்சுரின் யானையை பராமரித்த இலங்கையின் யானைப் பாகனை தாய்லாந்தின் மன்னரும் மகாராணியும் பரிசில்களை வழங்கி கௌரவித்துள்ளனர்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை சேர்ந்த டொன் உபுல் ஜயரட்ண தெனெல்பிட்டியகேவிற்கு தாய்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வில் மன்னரின் பிரதி அந்தரங்க செயலாளர் பரிசில்களை வழங்கி கௌரவித்துள்ளார்.
தாய்லாந்தின் இயற்கை வள சூழல் விவகார அமைச்சில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தாய்லாந்தில் சக்சுரினை பராமரிப்பதற்காக இலங்கையிலிருந்து அதனுடன் பயணித்த தெகிவளை மிருகக்காட்சி சாலையின் யானைப்பாகனையே தாய்லாந்து கௌரவித்துள்ளது.
சக்சுரின் தற்போது தாய்லாந்தின் யானைகளின் பாதுகாப்பு நிலையத்தில் பராமரிக்கப்படுகின்றது
கருத்துக்களேதுமில்லை