கட்சிஅரசியலை கைவிடுங்கள் அரவிந்த டிசில்வா வலியுறுத்து!

முதலீட்டாளர்களுக்கு உரிய சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக கட்சிபேதங்களை கைவிடவேண்டும் என இலங்கை கிறிக்கெட் அணியின் முன்னாள் வீரர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் முதலீட்டு சூழல் குறித்த இணையவழி கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முதலீட்டாளர்கள் வெளிப்படைத் தன்மை நம்பிக்கை மற்றும் நிலையான கொள்கை ஆகியவற்றை எதிர்பார்க்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் வெற்றிபெறவேண்டும் என்றால் ஒரேயொரு கொள்கை காணப்படவேண்டும் அதனை அனைத்து கட்சிகளும் அனைத்து மக்களும் ஆதரிக்கவேண்டும் என அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையிடம் முதலீட்டாளர்களுக்கான மிகப்பெரும் வாய்ப்புகள் உள்ளன எனினும் நாடு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட முயலும்போது கட்சி அரசியலால் அது பாதிக்கப்படுகின்றது.

நாடு வளர்ச்சி காண்பதை உறுதிசெய்வதற்காக நாங்கள் கட்சி அரசியலைக் கைவிட்டுவிட்டு ஓர் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர,; தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிர்வாகம் செய்வதற்கு என நாடொன்று இருக்கவேண்டும் என்பதை அனைத்து கட்சிகளும் புரிந்துகொள்ளவேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்தியாவிலிருந்து பாடம் கற்கவேண்டும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் தங்கள் தாய்நாட்டை வளப்படுத்துவதற்காக மீண்டும் திரும்பிவருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.