உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சிப்தொற புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு!
நூருல் ஹூதா உமர்
சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட (22ஃ24) ஆம் கல்வி ஆண்டில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 68 மாணவர்களுக்கு 04 மாதங்களுக்கு தலா 6000 ரூபா பெறுமதியான சிப்தொற புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீமின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.சப்றாஸ் கலந்து கொண்டமையுடன் அதிதிகளாக சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவாஃபிகா, கணக்காளர் ஏ.ஜே. நுஸ்ரத் பானு, நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ மஜீத், சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.ஹிதாயா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.சமூன், நிதி உதவியாளர் ஏ.சி. முஹம்மட், திட்டமிடல் பிரிவு பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றியாஸ், சமுர்த்தி சமூக பாதுகாப்பு விடய உத்தியோகத்தர் எல்.ஜி.எம்.ஜே.மரியம், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .
இதன் போது சாய்ந்தமருது பிரதேச தனவந்தர் ஒருவரால் 68 மாணவர்களுக்கும் அப்பியாச கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை