உயர் கல்விக்காக கனடாவுக்குச் சென்ற இலங்கை இளைஞர் வாகன விபத்தில் பலி!

உயர் கல்வியைத் தொடருவதற்காக கனடா சென்ற இலங்கை  இளைஞர்  ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியலில் பட்டம் பெற்ற இவர், கலாநிதி பட்டம் பெறுவதற்காகச் சென்றபோதே இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

28 வயதான எம்.எச். வினோஜ் யசங்க ஜெயசுந்தர என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கனடாவின் வான்கூவர் நகரில் மது போதையில் வாகனம் ஓட்டியவரின் கவனக்குறைவால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இளைஞர் கலிபோர்னியாவிலுள்ள ஆப்பிள் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.