கவனமாக இருங்கள்! வாக்னர் கூலிப்படை தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை..T
வாக்னர் கூலிப்படை தலைவரை கவனமாக இருக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை செய்தியொன்றினை வழங்கியுள்ளார்.
ஐரோப்பா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட நிலையில் ஜோ பைடன் வாக்னர் கூலிப்படை தலைவர் தொடர்பில் தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.
கடந்த மாதம் ஆயுதக்கிளர்ச்சி தோல்வியில் முடிந்த நிலையில், வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்யாவிலிருந்து வெளியேறி பெலாரஸ் நாட்டில் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், எவ்ஜெனி பிரிகோஜின் மீண்டும் ரஷ்யாவிற்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியானது.
ஜோ பைடன் எச்சரிக்கை
இருப்பினும், உறுதியான தகவல் எதுவும் வெளிவராத நிலையில், அவர் இரகசிய சிறையில் தள்ளப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில்,வாக்னர் கூலிப்படை தலைவரின் பாதுகாப்பு தொடர்பில் ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடவுளுக்கு மட்டுமே தெரியும், எவ்ஜெனி பிரிகோஜின் தற்போது எங்கிருக்கின்றார் என்பது. அவரது நிலையில் நான் இருந்திருந்தால், கண்டிப்பாக எனக்கு அளிக்கப்படும் உணவு முதற்கொண்டு நான் கவனமாக இருப்பேன் எனவும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை