3 கஜமுத்துக்களுடன் ஒருவர் அதிரடிப்படையினரால் கைது! அம்பாறையில் சம்பவம்
சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இளைஞனிடம் அம்பாறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின்போது கஜமுத்துக்கள் மீட்கப்பட்டதோடு, குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யானைகளை கொன்று பெறப்பட்ட 3 அரியவகை கஜமுத்துக்களை வைத்திருந்த சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைதானார்.
அம்பாறை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பாறை பொலிஸ் பிரிவில் உள்ள பஸ் நிலையத்துக்கு அருகில் சோதனை நடத்தப்பட்டபோதே, கஜமுத்துக்கள் மூன்றை வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்
கருத்துக்களேதுமில்லை