பிரதமர் தினேஷை சந்தித்தார் புதிய விமானப்படைத் தளபதி!
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, திங்கட்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது சம்பிரதாயப்படி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, பிரதமருக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.
எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இலங்கை விமானப்படையின் 19 ஆவது தளபதி ஆவார்.












கருத்துக்களேதுமில்லை