அமைச்சர் கெஹலியவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – சஜித் அதிரடி

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் இன்று(18) தெரிவித்தார்.

மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட காரணங்களுக்காக அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.