வவுனியா நகர பகுதில் தீப்பற்றிய உணவகம்!
வவுனியா நகரில் அமைந்துள்ள உணவகமொன்று புதன்கிழமை இரவு 8.25 மணியளவில் திடீரேன தீப்பற்றியமையையடுத்து பலத்த போராட்டத்தின் மத்தியில் தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கண்டி வீதியில் இரண்டாம் குருக்கு வீதி சந்தியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனை அவதானித்த பொதுமக்கள், வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் பலத்த போராட்டத்துக்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் தொடர்ச்சியாக அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு தீப்பரவல் ஏற்படாத வண்ணம் தீ கட்டுப்படுத்தப்பட்டது.
எனினும் இந்தத் தீப்பரவலுக்கான காரணம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கின்ற போதிலும் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இந்தத் தீப்பரவல் காரணமாக உணவகம் பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை