போக்குவரத்து பிரிவுப் பொறுப்பதிகாரியின் மோட்டார் சைக்கிள் திருடி தீயிட்டு எரிப்பு!

தியத்தலாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியாகவும் உப பொலிஸ் பரிசோதகராகவும் தியத்தலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவரின் மோட்டார்  சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டு வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில்  பொலிஸாரால் மீட்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளை திருடி தீயிட்டு எரித்தவரை கண்டுபிடிக்க துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.