பேராதனை வைத்தியசாலையில் யுவதி சாவு: செப்டர் எக்ஸோன் மருந்தே வழங்கப்பட்டது பணிப்பாளர் உறுதிப்படுத்தினார்
அண்மையில் பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனிக்கு சர்சைக்குறிய செஃப்டர் எக்ஸோன் மருந்தே உயிரிழந்தவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –
‘செஃப்டர் எக்ஸோன் மருந்து பயன்பாட்டால் மரணம் நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றே மீண்டும் பதிவாகியுள்ளது. சில மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.
ஆனால் தற்போது காணப்படும் நிலை மிகவும் அசாதாரணமானது. நாட்டில் பல பிரதேசங்களிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகின்ற காரணத்தால் ஒவ்வாமை என்ற விடயத்துக்கு அப்பால் சென்று இந்த மருந்தில் சிக்கல் இருக்கின்றதா என்பது தொடர்பாக ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
ஆகவே, இந்தச் சம்பவங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக சந்தேகங்களை மாத்திரம் எழுப்பாமல் உரிய மருந்துகளை உரிய முறையில் பரிசோதனைக்கு உட்படுத்தி இது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். – என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (












கருத்துக்களேதுமில்லை