குருந்தூர் மலையைப் பௌத்த தொல்லியல் பகுதியாக சட்ட ஆலோசனைக்கமைய பிரகடனப்படுத்த முடிவாம்! விதுர விக்கிரமநாயக்க இப்படி வியூகம்
சட்ட ஆலோசனைகளுக்கு அமைய குருந்தூர் மலையை ‘பௌத்த தொல்லியல் பகுதியாக ‘பிரகடனப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பதிலளித்த புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க –
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. சட்ட ஆலோசனைகளை பெற்று இவர் ( ஜயந்த சமரவீர) முன்வைத்த யோசனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை