மாவட்ட விவசாயகுழுகூட்டம் கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட விவசாய குழுவின் தலைவருமான திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இந்தக் கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன.

மேலும் மாவட்ட விவசாய துறைசார்ந்த திணைக்களங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்றிட்டங்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் செயற்பாடுகள், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் செயற்பாடுகள், மாகாண விவசாயத் திணைக்களத்தின் செயற்பாடுகள், கால்நடை பராமரிப்பு பற்றிய செயற்பாடுகள், வங்கி செயற்பாடுகள், நெல்சந்தைப்படுத்தல் சபையின் செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர், செயலாளர்கள், நீர்பாசன திணைகளத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர், துறை சார்ந்த திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.