சட்டக்கல்லூரி அனுமதிக்கட்டணங்கள் அதிகரிப்பு காரணத்தை வெளியிட்ட நீதியமைச்சர் விஜயதாஸ!

அரசாங்கத்தால் நிதியுதவி சட்டக்கல்லூரி கல்வி நடவடிக்கைக்கு வழங்கப்படுவதில்லை. அதனால்தான் சட்டக்கல்லூரிக்கான அனுமதிக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டி ஏற்படுகிறது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்கு பதிவளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சஜித் பிரேதமதாஸ குறிப்பிடுகையில் –

சட்டக்கல்லூரிக்கு அனுமதிப்பதற்காக 15 ஆயிரம் ரூபா அறவிடப்படும் நிலையில், பரீட்சை கட்டணமாக 1200 ரூபா அறவிடுவதன் மூலமும் மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கு முன்னர் சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பம் கோரி இருப்பது பிரச்சினைக்குரிய விடயமாகும். இது தொடர்பில் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும். – என்றார்.

இதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், புதிய வர்த்தமானி ஒழுங்குவிதிகள் பிரகாரம் சட்டக்கல்லூரி அனுமதிக் கட்டணத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கட்டண அதிகரிப்பு மேற்கொள்வதற்கு முன்னர் சட்ட கல்வி கவுன்சிலுடன் நீண்டவகையில் கலந்துரையாடி, இது தொடர்பாக தேடிப்பார்த்தோம்.

5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் சட்டக்கல்லூரி மேற்கொண்டு வருகிறது. ஆனால் சட்டக்கல்லூரிக்கு அரசாங்கத்தினால் எந்த நிதியும் வழங்குவதில்லை. சட்டக்கல்லூரிக்கு வேறு வருமான வழிகளும் இல்லை.

அதனால் மாணவர்களிடம் அறவிடப்படும் பணத்தில் இருந்தே ஒட்டுமொத்த சட்டக்கல்லூரி மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரம் சட்டக்கல்லூரிக்கு தற்போது விண்ணப்பம் கோரி இருப்பது தொடர்பாக தேடிப்பார்த்து உரிய நடவடிக்கை எடுப்பேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.