நானுஓயாவில் லொறி குடைசாய்ந்து விபத்து! இருவர் காயம்

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈஸ்டல் பகுதியில் ரதல்ல குறுக்கு வீதியில் வெள்ளிக்கிழமை இரவு லொறியொன்று வீதியில் குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர் என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது லொறியில் நால்வர் பயணித்த நிலையில் இருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மிகவும் செங்குத்தான இவ்வீதியில் சிறிய  வளைவு ஒன்றில் லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து தேயிலை மலையில் குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த வீதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு இவ்வீதி செங்குத்தான சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால், தகுந்த தடையாளிகளை பாவித்து வாகனங்களை செலுத்த வேண்டும் என பல அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நானுஓயா ரதல்ல குறுக்கு  வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள போதிலும் ஒருசில கனரக வாகனங்கள் இவ்வீதியால் பயணிப்பதும் குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.