இரட்சைச் சகோதரிகளை காணவில்லை

முந்தல் பகுதியைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் கடந்த 25 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முந்தல் – மங்கஎலிய நுகசெவன பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மல்சிகா, தில்சிகா என்ற சிறுமிகளே காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

காணாமல் போன நாளுக்கு முதல்நாள் குறித்த மாணவிகளில் ஒருவர் காதலனைப் பார்க்கச் சென்றுவிட்டு தாமதமாக வந்துள்ளார். இதனால் தாய் குறித்த சிறுமியைக் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், 25 ஆம் திகதி சுற்றுலா செல்வதற்காக 500 ரூபா தருமாறு தாயிடம் குறித்த சிறுமிகள் கேட்டுள்ளனர். தாய் அதற்கு மறுத்துள்ளார். இருவருக்கும் 100 ரூபாய் கொடுத்துள்ளனர்.

மதுரங்குளிக்கு சென்று வருவதாக குறித்த சிறுமிகள் வீட்டை விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், இதுவரை குறித்த சிறுமிகள் வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.