ஆலய குளத்தில் நீராடிய இளைஞன் உயிரிழப்பு – தமிழர் பகுதியில் பெருந் துயரம்
மட்டக்களப்பு தாந்தா மலை குளத்தில் நீராடிய 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
களுவாஞ்சிக்குடி எருவில் காளிகோவில் வீதியைச் சேர்ந்த மோகனசிங்கம் பிரகதீசன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
தாந்தாமலை முருகள் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் ஆலய வழிபாட்டுக்கு சென்ற குறித்த இளைஞனும் அவரது நண்பர்களுமாக தாந்தாமலை குளத்தில் நீராடிய போது, இளைஞன் நீரிழ் முழுகிய நிலையில் காப்பாற்றப்பட்டு மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.












கருத்துக்களேதுமில்லை