மிஸஸ் எர்த் இன்டர்நேஷனல் – 2023 சஷ்மி திஸாநாயக்க நாடு திரும்பினார்!
மிஸஸ் எர்த் இன்டர்நேஷனல் – 2023 பட்டத்தை வென்ற அம்பாறையைச் சேர்ந்த 21 வயதான திருமதி சஷ்மி திஸாநாயக்க புதன்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
45 நாடுகளைச் சேர்ந்த 60 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்தப் போட்டி இம்மாதம் 17 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்றது.
இதன்போது திருமதி சஷ்மி திஸாநாயக்க இந்த போட்டியின் 4 துணைப் போட்டிகளை வென்றார், இதன் மூலம் மிஸஸ் எர்த் இன்டர்நேஷனல் அழகியாகத் தெரிவானார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் திருமதி சஷ்மி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
‘எனது வெற்றி குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதன் காரணமாக எனது நாட்டை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்ல முடிந்தது. நான் தனியாக இந்தப் பயணத்தை ஆரம்பிக்கவில்லை.
‘ஆசிரியர் ருக்மல் சேனாநாயக்க, தேசிய இயக்குனர் சரித் குணரத்ன மற்றும் தயாரிப்பாளர் இசுரு குணசேகர ஆகியோர் இந்த சாதனைக்கு எனக்கு உதவினார்கள். மேலும் எனது பெற்றோரும் எனது கணவரும் நிறைய உதவினார்கள்.’ என்றார்.
கருத்துக்களேதுமில்லை