ஊரெழு அருட்கதிர்காமக் கந்தனின் வேட்டைத்திருவிழா
இராமபிரான் பாதம் பெற்ற புண்ணிய பூமியான ஊரெழு அருட்கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
அவ்வகையில், இன்று (27) வேட்டைத்திருவிழா மிகவும் சிறப்பாக பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
வேட்டையாடுவதற்காக ஆலயத்தில் இருந்து முருகப்பெருமான் வீதியுலாவாக நாகதம்பிரான் ஆலயத்திற்குச் சென்று வேட்டையாடி ஊரெழு கிராமத்தைச் சுற்றி மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தார்.
குறித்த வேட்டைத்திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் தரிசனத்தை பெற்றுக்கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை