சுழிபுரம் பறாளாய் அம்மனுக்கு வந்த சோதனை

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்புபட்ட மரமாகச் சித்திரித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்தில் உள்ள சங்கமித்த போதியா எனப்படும் பழைய அரச மரம் உள்ளது. அதனையே தொல்லியல் சின்னமாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதனையும் எதிர்காலத்தில் ஆக்கிரமித்து புத்தர் சிலையை அரச மரத்தின் கீழ் வைக்கலாம் என்ற அச்சம் குறித்த பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

அதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொல்பொருளியல் இடங்கள் என அடையாளப்படுத்தபட்டு பல இடங்கள் பறிபோகின்ற நிலை ஏற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.