மன்னாரில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுப்பு
மன்னாரில், இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித் திட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்டம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மன்னார் மாவட்ட பொறுப்பதிகாரி யக்கோ பிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்டான்லி டிமெல் கலந்து கொண்டார்.
மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் பிரதேச செயலாளர்கள், வைத்தியர் ஒஸ்மன் டெனி, திணைக்கள தலைவர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இலத்திரனியல் கழிவுகளை முறையாக சேகரிப்பதன் மூலம் சுற்றாடலை பாதுகாத்தலும், முகாமைத்துவம் செய்தலும் எனும் கருப்பொருளின் கீழே இந்த நிகழ்வு ஆரம்பமானது.
இதில் முதற் கட்டமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆகியோர் இலத்திரனியல் கழிவுகளை மாவட்ட பொறுப்பதிகாரியிடம் கையளித்தனர்.
இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை இலத்திரனியல் கழிவுகளை மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் ஒப்படைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை