புகையிரதம் முன் பாய்ந்து யுவதி உயிர்மாய்ப்பு

புகையிரதம் முன் பாய்ந்து யுவதி ஒருவரை உயிரை மாய்த்த சம்பவம் ஒன்று இன்று (09) காலை பதிவாகியுள்ளது.

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு புகையிரதம் முன்பாக பாய்ந்து யுவதியொருவர் இன்று (09) காலை தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் தலவக்கலை டயகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய கணபதி அனுஷா தர்ஷனி என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி ஹட்டன் நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாகவும் ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் ஐந்து வருடங்களாக காதல் உறவில் இருந்து வந்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.