யாழைச் சேர்ந்த மீனவர்கள் தமிழ்நாட்டில் கரையொதுங்கினர்
யாழ்ப்பாணம் – எழுவைதீவு பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர்கள் மூவர் தமிழ்நாட்டில் படகுடன் கரையொதுங்கியுள்ளனர்.
கடந்த 6 ம் திகதி எழுவைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற குறித்த மீனவர்களின் படகு என்ஜின் பழுதாகியிய நிலையில் தமிழகத்தின் வேதாரணியம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளனர்.
ஆனைக்கோட்டை, குருநகர் மற்றும் வல்வெட்டித்துறையை சேர்ந்த மூன்று மீனவர்களே இவ்வாறு படகுடன் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை