யாழில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர்மாய்ப்பு

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பகுதியில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்ததுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தூக்கில் தொங்குவதை அவதானித்த உறவினர்கள், அவரை மீட்டு காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

42 வயதுடைய இராமலிங்கம் வசந்தகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.