கொள்கலன் – ரயில் மீரிகமவில் விபத்து!
மீரிகம – வில்வத்தை பகுதியில் கொள்கலனொன்று ரயிலுடன் மோதியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. கொள்கலன் பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ‘பௌஃபி கர்லயால’ ரயிலுடன் மோதியுள்ளது.
இதனால் வடக்கு மற்றும் மலையக ரயில் மார்க்கங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல ரயில் சேவைகள் தாமதமாக புறப்படுவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை