யாழில் சிறுமிகளை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்திய இளைஞன் கைது

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் வன்புனர்விற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிகளவு மாத்திரைகளை உற்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அல்லைப்பிட்டியினை சேர்ந்த 11 வயது சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட உளவள சிகிச்சையின் பொழுது அல்லைப்பிட்டி வெண்புறவி நகர்பகுதியினை சேர்ந்த 25 வயதான இளைஞர் தொடர்பில் சிறுமி தகவல் வெளியிட்டார்.

தான் உட்பட்ட ஐந்து சிறுமிகளுக்கு தொலைபேசி மூலம் தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய நிலையில், பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியதன் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக குறித்த சிறுமி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் வைத்தியசாலை மூலம் ஊர்காவற்றை பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்ட நிலையில் ஊர்காவற்றை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சிறுமியினை சட்ட வைத்திய அதிகாரி முன் பொலிஸார் முற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சிறுமி வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக பாலியல் தொந்தரவை மேற்கொண்ட 25 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மற்றுமொரு சிறுமியும் குறித்த சந்தேகநபரால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.