தமிழர் தலைநகரில் கால் பதிக்கிறது பிரான்ஸ் -திட்டத்தை மாற்றிய அமெரிக்கா..T

திருகோணமலை கடற்படை முகாமில் பிரெஞ்சு கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கம் முன்வந்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமிய தலைவர், சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறான நிலையமொன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும், ஆனால் கடற்படையினர் தற்போது இந்த நிலையத்தை நிர்மாணிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

திட்டத்தை மாற்றிய அமெரிக்கா

தமிழர் தலைநகரில் கால் பதிக்கிறது பிரான்ஸ் -திட்டத்தை மாற்றிய அமெரிக்கா | France Catches Up To Trincomale

அமெரிக்கா நீண்டகாலமாக திருகோணமலையில் நிலைகொள்ள விரும்பிய போதிலும், இந்த நாட்டில் உள்ள தேசியவாத சக்திகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அமெரிக்கா தற்போது தனது திட்டத்தை மாற்றியுள்ளதாக கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

எதிர்ப்பை குறைக்க முயற்சி

தமிழர் தலைநகரில் கால் பதிக்கிறது பிரான்ஸ் -திட்டத்தை மாற்றிய அமெரிக்கா | France Catches Up To Trincomale

 

அதற்கமைய, அமெரிக்கா நேரடியாக திருகோணமலையை அணுகாது தனது சர்வதேச இராணுவ அரசியல் கூட்டாளியான பிரான்ஸ் ஊடாக இந்தப் பயிற்சி நிலையத்தை நிர்மாணிப்பதாகக் கணக்கிட்டு, இவ்வாறான செயற்பாட்டை பிரான்ஸ் மேற்கொள்வதன் மூலம் இந்நாட்டு மக்களிடம் இருந்து வரக்கூடிய எதிர்ப்பைக் குறைக்க முடியும் என சட்டத்தரணி உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார். .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.