காணிக்காக அண்ணனை கொலை செய்த தம்பி..T

சூரியவெவ பிரதேசத்தில் மூத்த சகோதரனை தம்பி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பிரதேசத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காணி தகராறு காரணமாக தனது சகோதரனை இவ்வாறு கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

பொலிஸில் சரண்

காணிக்காக அண்ணனை கொலை செய்த தம்பி | Brother Who Killed For Land In Galle

இந்த சம்பவத்தில் 29 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 24 வயதுடைய இளைய சகோதரர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.