மாளிகைக்காடு சபீனாவில் சேவை நலன் பாராட்டு!

 

நூருல் ஹூதா உமர்

கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமுஃகமுஃசபீனா முஸ்லிம் வித்தியாலத்தில் ஆசிரியர்களாக சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான ஏ ஆர்.ஏ.றஷீட் மற்றும் திருமதி ஜெ. இஸ்மாலெவ்வை ஆகியோரின் சேவையைப் பாராட்டுமுகமாக ஆசிரியர் நலன்புரிக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹதுல் நஜீம் கொண்டதுடன் கௌரவ அதிதியாக காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜே. டேவிட் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் ஓய்வுபெறவுள்ள காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜே.டேவிட் அவர்கள் பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் பாடசாலை பிரதியதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.