நீச்சல் போட்டிகளில் சாதனைபடைத்த மூதாட்டிகள்

வடமராட்சி வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்று இடம்பெற்றது. இதில் பெண்களுக்கான ஒரு கடல் மைல் நீச்சல் போட்டி இடம்பெற்றது.

இப்போட்டியில் நான்கு பிள்ளைகள், 40 வயது பெண்மணி முதலாமிடத்தையும், மூன்று பிள்ளைகள் இரண்டு பேரப்பிள்ளைகளைக் கொண்ட 44வயது பெண்மணி இரண்டாமிடத்தையும்  பிடித்துள்ளதோடு நான்கு பேரப்பிள்ளைகள் மற்றும் ஆறு பிள்ளைகளுடன்  56 வயதான பெண்மணியொருவர்  மூன்றாமிடத்தையும்  தனதாக்கிக் கொண்டனர்.

இதில் ஆண்களுக்கான நீச்சல், படகோட்டப் போட்டிகள் இடம்பெற்றன, ஆயினும் பெண்களுக்கான நீச்சல்ப் போட்டியில் வயோதிப மாதுக்களின் நீச்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பருத்தித்துறை- தென்னியம்மன்முனையில் இருந்து இன்பசிட்டி வரை குறித்த நீச்சல் போட்டி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

   

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.