டிசம்பரில் இருந்து நீர் கட்டணத்திற்கான புதிய விலை சூத்திரம்

நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தற்போதைய நீர் கட்டண முறையானது அந்த மாதம் வரை மாத்திரமே அமுலில் உள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, விலைச்சூத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அதைத் திருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்