யாழ்ப்பாணத்தில் வீட்டொன்றில் இருந்து தினமும்   வீதிக்கு வெளியேற்றப்படும் நீரால் மக்கள் பாதிப்பு

யாழில் வீடொன்றில் இருந்து தினமும்  வீதிக்கு நீர் வெளியேற்றப்படுவதாக குறித்த வீதியைப் பயன்படுத்தும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள  கோவில் வீதியில் காணப்படும் வீடொன்றில்  இருந்தே இவ்வாறு நீர் வெளியேற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளியேற்றப்படும் நீரானது வீதியோரமாகத்  தேங்கிக் காணப்படுவதால் அந்த வீதியைப் பயன்படுத்தும் மக்கள்  பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல தடவைகள் மாநகர சபையினருக்கு அறிவித்த நிலையிலும், மாநகர சபை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத்  தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்