கடன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக உலக வங்கிப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு!
நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள நிதி மற்றும் கடன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுக்கு நுண், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் எடுத்துரைத்தனர்.
உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நாலக கொடஹேவா, லக்ஸ்மன் கிரியெல்ல, எரான் விக்கிரமரத்ன, நிரோஷன் பெரேரா மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, கொரோனா காலத்தில் தம்மால் தங்கள் தொழிலை சரியாக மேற்கொள்ள முடியவில்லை என்றும், கடந்த அரசாங்கத்தின் திறமையற்ற ஆட்சி நிர்வாகத்தின் காரணமாக நாடு வங்குரோத்தடைந்தமையால் தங்களின் தொழில்கள் நஷ்டத்தை எதிர்நோக்கின என்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இதன் காரணமாகக் கடனை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், கடனைச் செலுத்துவதற்கு சாதகமான வேலைத்திட்டம் ஒன்றை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
தற்போதைய அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் பரேட் சட்டத்தை அமுல்படுத்துவதால் தாம் உட்பட நாடளாவிய ரீதியில் பரந்து கிடக்கும் நுண், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கருத்துக்களேதுமில்லை