வேலணை பிரதேசசெயலக பண்பாட்டுப் பெரு விழா!

வேலணை பிரதேச செயலகத்தின்  பண்பாட்டு பெருவிழா வெள்ளி;கிழமை வேலணை மத்திய கல்லூரியின்  பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

வேலணை பிரதேச செயலாளர் கைலாயபிள்ளை சிவகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாதசுந்தரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகமும், வேலணை பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் அந்தப் பிரதேசத்தைச்  சேர்ந்த 13 கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டிருந்ததோடு அவர்களுக்கு  நினைவுப்  பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.