இணைந்த கரங்கள் அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்

கமுஃசதுஃவீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 85 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப் பை, பாதணி என்பன வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் அந்தோனி சுதர்சன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

இணைந்த கரங்கள் அமைப்பு உறவுகளின் நிதி பங்களிப்போடும் மற்றும் மில்ரோகித் ராஜ்குமாரின் நிதி பங்களிப்புடன் இணைந்து இந்த மாணவகளுக்கான கற்றல் உபகரணங்கள், பாதணி மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர் இ.தியாநிதி, திருமதி ராஜ்குமார் ஜெயச்சித்திரா  ஆகியோர் அதிதிகளாகவும் மேலும் பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

மேலும் இணைந்த கரங்கள் அமைப்பின்  உறுப்பினர்களான காந்தன், சுரேஷ்,ஆகியோரால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை,பாதணிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.