டெங்கு நோயைக் கட்டுப்படுத்தல் தொடர்பாக தெல்லிப்பழை வைத்திய சாலையில் சிரமதானம்!

தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் வைத்திய அத்தியட்சகர் எம்.றெமான்ஸ் தலைமையில் வைத்திய சாலை நிர்வாக உத்தியோகத்தர், சிரேஷ்ட தாதிய பரிபாலகி மற்றும் பொது சுகாதார நோய்க்கட்டுப் பாடு தொடர்பான அதிகாரிகள் மற்றும் வைத்திய சாலையின் தொற்று நோய் கட்டுப்பாட்டு பிரிவின் வைத்திய சாலை மேற்ப்பார்வையாளர் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் வைத்திய சாலையின் தாதியர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்திய சாலையின் பரிசாரகர்கள், சுகாதாரப் பணி உதவியாளர். மற்றும் வைத்திய சாலையின் துப்புரவுத்  தொழிளாளர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடனும் இலங்கை இராணுவத்தின் யாழ்.மாவட்ட 513 ஆவது காலாட்படை படைப்பிரிவின் பாதுகாப்பு படையினரும் இனைந்து கடந்த வியாழக்கிழமை தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் டெங்கு கட்டுப்பாடு வாரத்தை ஆரம்பிக்கும் முகமாக வைத்திய சாலையின் வளாகத்தில் பாரிய சிரமதானப் பணிகளை  மேற்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்