கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவாகிய முஹம்மட் அஹ்னாபுக்கு ஹரீஸ் எம்.பி வாழ்த்து!

 

நூருல் ஹூதா உமர்

கல்முனை கமுஃகமுஃஸாஹிரா தேசிய கல்லூரி மற்றும் கல்முனை கமுஃகமுஃஅல் அஸ்ஹர் வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவனும், கல்முனை பிராந்திய முன்னணி கழகங்களில் ஒன்றான லெஜெண்ட்ஸ் விளையாட்டுக்கழக முன்னணி வீரர்களில் ஒருவராகவும், சிறு வயது முதல் கிரிக்கெட்டில் பல்துறைகளிலும் திறமையை வெளிக்காட்டிய முஹம்மட் அஹ்னாப் கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி எனக்கு மட்டுமின்றி இலங்கைவாழ் சகலருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது என விளையாட்டுத்துறை முன்னாள் பிரதியமைச்சரும், ஸ்ரீ ல.மு.கா பிரதித் தலைவருமான, நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –

தான் பிரதிநிதித்துவப்படுத்திய கழகங்களின் பல்வேறு வெற்றிகளுக்கு காரணமாக அமைந்திருந்து சிறந்த வீரராக திகழ்ந்த இவர் கடின உழைப்பால் இந்த நிலையை அடைந்துள்ளார் என்பதே இங்கிருக்கும் நல்ல விடயம். இவர் மாவட்ட, மாகாண மட்டங்கள், மற்றும் தேசியத் தெரிவுகளில் முதன்மை காட்டி, கொழும்பு சாஹிரா கல்லூரி, கொழும்பு மூர்ஸ் அணி, கத்தார் உள்ளக அணி என பலபோட்டிகளிலும் போராடி தனது திறமைகளை உச்சளவில் காட்டிய சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை அறியும் போது மகிழ்ச்சியளிக்கிறது.

சர்வதேச அளவில் தனது திறமையால் பிரகாசிக்க எம் மண்ணின் வீரரை பாராட்டுவதில் அகமகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்