தமிழர்களை ஏமாற்றும் செயல்களை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளாராம்! குமுறுகிறார் கஜேந்திரகுமார்

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போலியான நாடகங்களை முன்னெடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அவர் முன்வரவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லாத மாகாண குழுவொன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சார்பானவர்களை இணைத்துக் கொள்வதற்காகவே மாகாண சபை குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.(

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.