ஜனாதிபதி ரணிலின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்!  வேலுகுமார் எச்சரிக்கை

தங்களுடைய எதிர்கால அரசியலுக்காக ஜனநாயக விரோத செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டு மக்களால் ஜனநாயக ரீதியில் புறக்கணிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள குழுவொன்றே ஆட்சியை நிர்வகித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் பிரதேச சபை இல்லை, மாகாண சபை இல்லை, இருக்கின்ற நாடாளுமன்றத்துக்கும் அதிகாரம் இல்லை இவ்வாறான நிலையில் ஜனநாயகமான நாட்டை எவ்வாறு உருவாக்க முடியும் என வேலுகுமார் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் மாகாண ரீதியிலான ஆலோசனை சபையை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகின்றார்கள். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது செயற்பாடு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மக்கள் ஆணை இல்லாத ரணில் விக்கிரமசிங்கவும் பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்