”பைத்தியக்காரர்கள் பற்றிக் கவலைகொள்ளவேண்டாம்”

”அரசியலுக்காகப் பேசும் பைத்தியக்காரர்கள் பற்றிக்  கவலைகொள்ள வேண்டாம் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஸ்ரீ போதி தக்சனாராமய விகாரையில்  இன்றையதினம்  இடம்பெற்ற குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான  ஊடக சந்திப்பில் ”அரசியல்வாதிகள் இன முரண்பாட்டை தூண்டுகின்றனர்” என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்த  கூற்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பைத்தியக்காரர்கள் அவ்வாறுதான்பேசுவார்கள். அவர்கள் தொடர்பில் கவலைகொள்ள  வேண்டாம். அவ்வாறானவர்கள் இங்கும் உள்ளார்கள் அங்கும் உள்ளார்கள்.

இவர்கள் தேர்தல் வரும்போது மாத்திரமே இது குறித்துப்  பேசுவார்கள். எனவே அந்த பைத்தியக்காரர்கள் குறித்துக் கருத்திற்கொள்ளத் தேவையில்லை ”எனத்  தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்