மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெசிடோ நிதியுதவி

மன்னார் மாவட்டத்தில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு `மெசிடோ‘ நிறுவனத்தால் இன்று நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மண்டோஸ் புயலால்பாதிக்கப்பட்டு உரிய நிவாரணங்கள் கிடைக்க பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து  காணப்படும் 40 மீனவ குடும்பங்களுக்கே இவ்வாறு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட செயலக ஜேக்கா மண்டபத்தில் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இடம் இந்நிகழ்வில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா45.000 ரூபாய்  பெறுமதியான வலைகள் உள்ளடங்களான மீன் பிடிப்  பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் மெசிடோ‘ நிறுவன அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.