பளையில் பெருமளவு வெடிப்பொருட்கள் மீட்பு

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் புதுக்காட்டு பகுதியில் தென்னை பயிர்ச் செய்கை சபைக்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து பெருமளவு வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று செவ்வாய்க்கிழமை (22) பளை பிரதேச இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இராணுவத்தினரால் குறித்த வெடிப்பொருட்கள்  மீட்கப்பட்டுள்ளன.

RPG AP – 48, RPG AT- 12, 24, 60mm Para-11, M75-11, SFG87 – 4,Tape82 -3,   போன்ற வெடிப்பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்