வவுனியாப் பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்த கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழு

வவுனியாப் பல்கலைக்கழகத்திற்கும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தமொன்று  நேற்றைய தினம்(22) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், வியாபார கற்கைகள் பீடாதிபதி பேராசிரியர் யோ.நந்தகோபன், மக் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கிறிஸ்டி மெக்லெனன், திறன் அபிவிருத்தி நிபுணர் த.செந்தூரன் மற்றும் தொழில் மற்றும் சமூகத் தொடர்புப் பிரிவு இணைப்பாளர், சி.சிவனேந்திரன், பல்கலைக்கழக அதிகாரிகள்,  விரிவுரையாளர்கள் எனப்  பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த ஒப்பந்தத்தமானது,சரியான தொழில்வாய்ப்பு மற்றும் புதிய தொழில்களுக்கு தயார்படுத்தல் மற்றும் புதிய முயற்சியாளர்களை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்