இரண்டு நிலங்களையும் இணைப்பதற்கு முன்னர் சிறுபான்மை சமூக மனங்களை ஒன்றிணைக்குக! முஷாரப் எம்.பி. கோரிக்கை

பெரும்பான்மை சமூகத்தின் நடவடிக்கைகளுக்கு விமர்சனம் செய்கின்ற நாம் சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபின் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைவு ஒப்பந்தத்தில் முஸ்லீம் சமூகமும் தமிழ் சமூகமும் மொழிரீதியா ஒன்றுபடுவோம் என்ற விடயம் 1976 மற்றும் 1987 ஒப்பந்தங்களில் முன்னெடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆனால் இரு நிலங்களையும் இணைக்கும் என கருத்துரைத்த தமிழ் தரப்பு இரு மனங்களையும் இணைப்பதற்கான சாத்தியங்களை முஸ்லீம் தரப்புக்கு உருவாக்கியுள்ளதா என கேள்வியெழுப்பியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்