வடமராட்சியில் கொடூர விபத்து: 14 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் இன்று நண்பகல் டிப்பரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் மேலும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் பெயர் சாகித்தியன் எனவும் அவர் கொற்றாவத்தைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோட்டார் சையிக்கிளும் டிப்பர் வாகனமும் வளைவு பகுதியில் திரும்பிய போதே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும், இதன்போது மோட்டார் சையிக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டதோடு, மோட்டார் சையிக்கிளும் டிப்பர் வாகனத்தினுள் சிக்குண்டு தீப்பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.